சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் திருவிழா: கொடியேற்றத்துடன் துவக்கம்

காங்கயத்தை அடுத்துள்ள சிவன்மலையில் உள்ள முருகன் கோயிலில் தைப்பூசத் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை துவங்கியது.

காங்கயத்தை அடுத்துள்ள சிவன்மலையில் உள்ள முருகன் கோயிலில் தைப்பூசத் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை துவங்கியது.
திருப்பூர் மாவட்டம், காங்கயத்தை அடுத்துள்ள சிவன்மலையில் உள்ள சுப்பிரமணியசாமி கோயில் தைப்பூசத் தேர்த் திருவிழா கடந்த 12ஆம் தேதி துவங்கியது. வீரகாளியம்மன் மலைக் கோயிலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பின்னர் சிறப்பு பூஜை நடைபெற்றது. காலை 11 மணியளவில் விநாயகர் வழிபாடும், தொடர்ந்து முருகன் கோயில் சன்னதி முன் உள்ள கொடிமரத்தில் பகல் 12 மணிக்கு கொடி ஏற்றுதலும் நடந்தது. மதியம் 1 மணிக்கு மலை அடிவாரத்தில் உள்ள  நஞ்சுண்டேஸ்வரர் கோயிலில் சுவாமி எழுந்தருளல் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து தினசரி காலை 9 மணிக்கு காலசாந்தி நடைபெற உள்ளது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்வடம் பிடிக்கும் நிகழ்ச்சி வரும் 21ஆம் தேதி காலை10 மணிக்கு துவங்குகிறது. 22ஆம் தேதி திருத்தேர் மலையை வலம் வந்து கிரிவலப் பாதையில் நிலை நிறுத்தப்படும். பின்னர்  மூன்றாம் நாள் 23ஆம் தேதி தேர் நிலையை அடையும். இந்த 3 நாள்களும் அன்னதானம், பக்தி சொற்பொழிவு, பட்டிமன்றம், இன்னிசை நிகழ்சிகள் நடைபெறுகிறது. பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்தி கடன் செலுத்துவர். வரும் 30ஆம் தேதி தேர்த் திருவிழா நிறைவடைகிறது.கொடி ஏற்றத்தை முன்னிட்டு சிவன்மலை முருகன் மலைக் கோயிலில் செவ்வாய்க்கிழமை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் எஸ்.ஹர்சினி, உதவி ஆணையர் கண்ணதாசன், அலுவலக ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com