கலாசாரப் பேரவை சார்பில் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள்

தமிழர் பண்பாடு கலாசாரப் பேரவை சார்பில்,  பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் அவிநாசி அருகே ஆட்டையாம்பாளையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழர் பண்பாடு கலாசாரப் பேரவை சார்பில்,  பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் அவிநாசி அருகே ஆட்டையாம்பாளையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
தைப்பொங்கல் திருநாளையொட்டி  நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,  பரதம், சிலம்பம், கும்மி, சலங்கை,  ஒயிலாட்டம், பெருஞ்சலங்கையாட்டம், மண்ணிசைப் பாடல், பண்ணும்-பரதமும் உள்ளிட்ட  நிகழ்ச்சிகள் நடைபெற்றன.   
"தமிழரின் சீர்மிகு பண்பாடும்-கலாசாரமும்' என்ற தலைப்பில் திரைப்பட இயக்குநர்  விஜய் கிருஷ்ணராஜ்  பேசினார்.  நிகழ்ச்சிக்கு,  தமிழர் பண்பாடு கலாசாரப் பேரவைத் தலைவர் கா.நடராசன் தலைமை வகித்தார். பொறுப்பாளர்கள் அ.சி.பழனிசாமி, நா.சுப்பிரமணியன், க.செ.வெங்கடாசலம், சு.கோவிந்தப்பன், கு.மாரப்பன், செ.சுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்றனர். 
விழாவில்,  தமிழரின் கலாசாரமான வேட்டியை நாடுமுழுவதும் பிரபலப்படுத்தி வரும் திருப்பூர் ராம்ராஜ் காட்டன் நிறுவனர் அ.ரா.நாகராஜுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 
நிகழ்ச்சியை பொறுப்பாளர்கள் பரணி, அ.பழனிசாமி, ந.முருகேசன், மு.மாணிக்கம் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com