தொழில்நுட்ப ஜவுளி பொருள்களுக்கு வியாபாரப் பெயர் குறியீடு: ஏஇபிசி நன்றி

தொழில்நுட்ப ஜவுளி பொருள்களுக்கு மத்திய ஜவுளி அமைச்சகம் வியாபாரப் பெயர் குறியீடு (ஹெச்எஸ்என் குறியீடு) வழங்கியதற்கு

தொழில்நுட்ப ஜவுளி பொருள்களுக்கு மத்திய ஜவுளி அமைச்சகம் வியாபாரப் பெயர் குறியீடு (ஹெச்எஸ்என் குறியீடு) வழங்கியதற்கு திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் (ஏஇபிசி) நன்றி தெரிவித்துள்ளது. 
இது குறித்து திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்தியாவில் தொழில்நுட்ப ஜவுளி பொருள்கள் பாரம்பரிய ஜவுளி பொருள்கள் என்ற பெயரில் வர்த்தகம் செய்யப்பட்டு வந்தது.
இந்தப் பொருள்களுக்கு வியாபாரப் பெயர் குறியீடு வழங்கக் கோரி ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் சார்பில்,  மத்திய ஜவுளி அமைச்சகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில், 207 தொழில்நுட்ப ஜவுளி பொருள்கள் அடையாளம் காணப்பட்டு வியாபாரப் பெயர் குறியீடு அறிவித்துள்ளது. இதற்காக மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் துணைத் தலைவர் ஏ.சக்திவேல் நன்றி தெரிவித்துள்ளார்.  வியாபாரக் குறியீடு வழங்கப்பட்டுள்ள 207 பொருள்களில் திருப்பூரில் இருந்து 12 பொருள்கள் வர்த்தகம் செய்யப்படுகின்றன. 
துப்பாக்கி குண்டு துளைக்காத ஆடைகள், தீயணைப்புத் துறையினர் பயன்படுத்தும் ஆடைகள், நரம்புச் சுருளால்  பாதிக்கப்பட்டவர்கள் அணியும் ஆடைகள், விளையாட்டு வீரர்களுக்கான ஆடைகள் அடங்கும்.
வியாபாரக் குறியீடு வழங்கியுள்ளதால் ஏற்றுமதித் தொழில் மேலும் வளர்ச்சியடையும். தற்போது இந்தப் பொருள்களின் ஏற்றுமதி ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கோடியாக உள்ளது. இந்த வியாபாரக் குறியீடு மூலமாக ஏற்றுமதியின் மதிப்பு வரும் காலங்களில் அதிகரிக்கும். ஆகவே, ஏற்றுமதியாளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஏற்றுமதியை அதிகரித்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com