பொங்கல் கிரிக்கெட் போட்டி: உடுமலை அவதார் அணி சாம்பியன்

பொங்கல் திருவிழாவை ஒட்டி கடந்த 5 நாள்களாக உடுமலையில் நடைபெற்று வந்த மண்டல அளவிலான கிரிக்கெட்

பொங்கல் திருவிழாவை ஒட்டி கடந்த 5 நாள்களாக உடுமலையில் நடைபெற்று வந்த மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டியில் உடுமலை அவதார் கிரிக்கெட் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. 
உடுமலை பிராட்மேன் கிரிக்கெட் கிளப் மற்றும் உடுமலை சிவாணி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சார்பில் உடுமலை நேதாஜி மைதானத்தில் கடந்த ஜனவரி 12ஆம் தேதி துவங்கி 16ஆம் தேதி வரை மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் மொத்தம் 25  அணிகள் கலந்து கொண்டன. 20 ஓவர்கள் அடிப்படையில் இந்தப் போட்டிகள் நடைபெற்றன. இறுதிப் போட்டி புதன்கிழமை மாலை நடைபெற்றது. 
இதில் அவதார் கிரிக்கெட் கிளப் அணியும்,  உடுமலை எம்எஸ்எம் கிரிக்கெட் கிளப் அணியும் மோதின. முதலில் உடுமலை எம்எஸ்எம் அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆடியது. இந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்களைக் குவித்தது. இதன் பின்னர் ஆடிய உடுமலை அவதார் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 128 ர ன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. 
இந்தப் போட்டியைக் கான ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நேதாஜி மைதானத்தில் கூடி யிருந்தனர். நிறைவில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற உடுமலை அவதார் கிரிக்கெட் கிளப் அணிக்கு கோப்பையும், ரொ க்கப் பரிசாக ரூ.25 ஆயிரமும் வழங்கப்பட்டது. இரண்டாவது இடத்தை பெற்ற உடுமலை எம்எஸ்எம் அணிக்கு ரன்னர் கோப்பையும் ரூ.20 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்ப ட்டது. 
மேலும், உடுமலை பிஎம்சிசி அணி மூன்றாம் இடத்தையும், க்ரவுண்ட் பிரண்ட்ஸ் அணி நான்காம் இடத்தையும் பிடித்தன. இதுபோக தொடர் ஆட்ட நாயகன், சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த பவுலர் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. பிராட்மேன் கிரிக்கெட் கிளப் நிர்வாகிகள் டி.பாலகுமார், தாஸ்ராஜன் உள்ளிட்டோர் இதற்கான ஏற்பாடு களைச் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com