ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் தர்னா

திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வெள்ளிக்கிழமை தர்னாவில்

திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வெள்ளிக்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த தர்னாவுக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தர்னா குறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதிகளைக் களைய வேண்டும்.  2003 ஆம் ஆண்டுக்குப்  பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும்.  21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்க வேண்டும். 
அங்கன்வாடி மையங்களில் மத்திய அரசின் முடிவின்படி புதிய ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு மாறாக தொடக்கப் பள்ளி ஆசிரியர்களைப் பணிமாற்றம் செய்வதை ரத்து செய்ய வேண்டும். 3,500 தொடக்கப் பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் முடிவையும், 3,500 சத்துணவு மையங்களை மூடும் முடிவையும் தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்னா நடைபெறுகிறது என்றனர். இதில், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத் தலைவர் ஜான் கிறிஸ்துராஜ், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் ராமகிருஷ்ணன், தமிழக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் ஞானசேகர் உள்பட  400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com