சுடச்சுட

  

  அவிநாசி அருகே தெக்கலூரில் சாலையோரம் நின்றிருந்த ஆம்னி வேனில் திடீரென தீப் பிடித்து முற்றிலும் கருகியது.
  அவிநாசி அருகே தெக்கலூர் புறவழிச் சாலையில் திங்கள்கிழமை மதியம் சாலையோரம் ஆம்னி வேன் தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இருப்பினும் வேன் முற்றிலும் எரிந்து சேதமானது.
  இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: தெக்கலூரில் இருந்து அவிநாசி நோக்கி ஆம்னி வேன் வந்துபோது வேன் பழுதாகியுள்ளது. இதையடுத்து, இயந்திரக் கோளாறு காரணமாக ஓட்டுநர் வேனை நிறுத்திப் பார்த்துள்ளார்.
  இந்த வேனில் சமையல் எரிவாயு உருளையும் பொருத்தப்பட்டுள்ளது. இதில் எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு வேன் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் வேனை ஓட்டி வந்தவர் யார், உடன் வந்தவர்கள் யார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai