சுடச்சுட

  

  கணக்கம்பாளையம் ஊராட்சி நிர்வாகத்தை  கண்டித்து பொதுமக்கள் தர்னா

  By DIN  |   Published on : 02nd July 2019 08:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உடுமலை ஒன்றியம் கணக்கம்பாளையம் ஊராட்சியில் நிலவி வரும் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் திங்கள்கிழமை தர்னா நடைபெற்றது.
  கணக்கம்பாளையம் ஊராட்சியில் சுமார் 25 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந் நிலையில் குடிநீர் இணைப்பு கொடுப்பதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் கூறப்படுகின்றன.
  குறிப்பாக முறையற்ற வகையில் ஏராளமான இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இதில் பல லட்சம் ரூபாய் ஊழல் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், ஊராட்சிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாததால் நோய் பரவும் அபாயம் நிலவி வருகிறது.
  இந்நிலையில் கணக்கம்பாளையம் ஊராட்சியில் நிலவி வரும் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் தர்னா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு திங்கள்கிழமை தர்னா நடைபெற்றது.
  இதில் ஊராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகத்தில் ஏற்பட்டு வரும் குளறுபடிகளை சீர் செய்ய வேண்டும். தினசரி குடிநீர் வழங்க வேண்டும். முறையற்ற வகையில் வழங்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகளை அகற்ற வேண்டும்.
  தினசரி குப்பைகளை அகற்ற வேண்டும். பொதுமக்களின் அடிப்படை பிரச்னைகளை சீர் செய்ய வேண்டும். ஊராட்சியில் நிலவி வரும் நிர்வாக சீர்கேடுகளை மாவட்ட நிர்வாகம் சீர் செய்ய வேண்டும் என்பன உள்ளிட் ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து தர்னா நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai