சுடச்சுட

  

  பல்லடம் அருகே கேத்தனூரில் சாலை விபத்தில் மோட்டார் மெக்கானிக் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
  கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர் மகன் அரவிந்த் அந்தோணி (24). இவர் கோவை மாவட்டம், சூலூர் அருகே இருகூரில் உள்ள  தனியார் மோட்டார் நிறுவனத்தில் தங்கி மெக்கானிக்காக  வேலை செய்து வந்தார்.
  இந்த நிலையில், பழனி நகராட்சி அலுவலகத்தில் ஏற்பட்ட மோட்டார் பழுதை சரி செய்ய நிறுவனத்தின் ஆம்னி வேனில் அரவிந்த் அந்தோணி, சூலூரைச் சேர்ந்த  விக்னேஸ்வரன்  (29), அந்தியூரைச் சேர்ந்த நவீன் (23) ஆகியோர் புறப்பட்டுச் சென்றனர்.
  ஆம்னி வேனை விக்னேஸ்வரன் ஓட்டியுள்ளார். அவரது அருகே  அரவிந்த் அந்தோணி அமர்ந்து சென்றுள்ளார். பல்லடம் -உடுமலைபேட்டை சாலை, கேத்தனூர் பிரங்கிமேடு என்ற இடத்தில் வேன் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் மீது மோதாமல் தவிர்க்க விக்னேஸ்வரன் சாலையின் கிழே ஆம்னி வேனை இறக்கியுள்ளார்.
  இதில், கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன் தென்னை மரத்தின் மீது மோதியது.    வேனில் இருந்த மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
  இதையடுத்து, அவ்வழியாக சென்றவர்கள் காமநாயக்கன்பாளையம் போலீஸாருக்கு  தகவல் கொடுத்தனர். விபத்தில் காயமடைந்த மூவரையும்  மீட்டு பல்லடம் அரசு  மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 
  இதில், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அரவிந்த் அந்தோணி உயிரிழந்தார். காயமடைந்த நவீன், விக்னேஸ்வரன் ஆகியோர் பல்லடம்  தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து காமநாயக்கன்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai