சுடச்சுட

  

  அவிநாசி  சேவூர் சாலை புனித தோமையார் தேவாலயத்தில் நற்கருணை திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
  இதில் சிலுவைபுரம் கிளை பங்கு குரு ஜெயராஜ், கோவை நல்லாயன் கிறிஸ்துவ கல்லூரிப் பேராசிரியர் கிறிஸ்டோபர் ரோச், லூர்துபுரம் தேவாலய குரு லூர்து இருதயராஜ், புனித தோமையார் தேவாலய பங்கு குரு கென்னடி ஆகியோர் இணைந்து திருப்பலி நிறைவேற்றினர். இதைத்தொடர்ந்து, புனித தோமையார் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த நற்கருணை பேழை வரை பக்தர்கள் பவனியாக சென்று சிறப்பு ஆராதனை நடத்தினர்.
  இதையடுத்து, தேவாலய முகப்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த நற்கருணை பேழை முன் சிறப்பு ஆராதனை நடைபெற்றறு, மறையுரையுடன், நற்கருணை ஆசீர்வாதம் வழங்கப்பட்டது.
  இதில் ஏராளமான பக்தர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை பங்கு குரு, பங்கு மக்கள் செய்திருந்தனர்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai