சுடச்சுட

  

  15 வேலம்பாளையம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட இந்து முன்னணியினர்

  By DIN  |   Published on : 02nd July 2019 08:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருப்பூர், சாமுண்டிபுரத்தில் கைது செய்யப்பட்ட  2 பேரை விடுவிக்கக் கோரி இந்து முன்னணி அமைப்பினர் 15 வேலம்பாளையம் காவல் நிலையத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். 
  திருப்பூர், குமார் நகரை அடுத்த சாமுண்டிபுரம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் கிறிஸ்தவ கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தால் அப்பகுதி மக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாகக் கூறி சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.  
  இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ், கண்ணன் (எ) சின்னசாமி ஆகியோர் அந்த மண்டபத்துக்கு சென்று கிறிஸ்தவ கூட்டத்துக்கு மண்டபத்தை கொடுத்தது தொடர்பாக மண்டப நிர்வாகியான ஜெயராஜிடம் தகராறில் ஈடுபட்டதுடன், அங்குள்ள பொருள்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. 
  இதுகுறித்து ஜெயராஜ் கொடுத்த புகாரின்பேரில், 15 வேலம்பாளையம் காவல் துறையினர் செல்வராஜ், கண்ணன் ஆகியோரை திங்கள்கிழமை கைது செய்தனர் . 
  இதுகுறித்த தகவலறிந்த இந்து முன்னணி அமைப்பினர் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் செந்தில்குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். 
  இதைத் தொடர்ந்து, திருப்பூர் வடக்கு காவல் உதவி ஆணையர் ரமேஷ்கிருஷ்ணன், இந்து முன்னணி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 2  பேரையும் காவல் துறையினர் விடுவித்தனர். இந்த சம்பவம் காரணமாக 15 வேலம்பாளையம் காவல் நிலையத்தில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai