கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை
By DIN | Published On : 13th July 2019 07:18 AM | Last Updated : 13th July 2019 07:18 AM | அ+அ அ- |

திருப்பூரில் கொலை வழக்கில் தொடர்புடையவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
திருப்பூர், பெருமாநல்லூர், படையப்பா நகரைச் சேர்ந்தவர் கார்த்திக் (26). இவருக்கும் நெருப்பெரிச்சல் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (29) என்பவருக்கும் கடந்த ஆண்டு மே மாதம் டாஸ்மாக் கடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த ராஜேந்திரன், கார்த்திக்கின் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு கொலை செய்தார். இது குறித்து பெருமாநல்லூர் போலீஸார் வழக்குப்பதிந்து, ராஜேந்திரனைக் கைது செய்தனர். இவ்வழக்கு திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இதில் ராஜேந்திரனுக்கு ஆயுள் தண்டனை, ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி
உத்தரவிட்டார்.