Enable Javscript for better performance
நீர் மேலாண்மை பணிகளை ஆய்வு செய்த மத்திய அரசுக் குழுவினர்- Dinamani

சுடச்சுட

    

    நீர் மேலாண்மை பணிகளை ஆய்வு செய்த மத்திய அரசுக் குழுவினர்

    By DIN  |   Published on : 13th July 2019 07:15 AM  |   அ+அ அ-   |    |  

    அவிநாசி வட்டத்தில் நீர் மேலாண்மை திட்டப் பணிகளை மத்திய அரசு குழுவினர் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
     "ஜல் சக்தி அபியான்' என்ற இயக்கம் மூலம் மழைநீர் சேகரிப்பு, நீர் சிக்கனத்தை வலியுறுத்துதல், பாரம்பரிய நீர்நிலைகள், நீர் ஆதாரங்களை புதுப்பித்தல், பயனற்ற ஆழ்துளை கிணறுகளில் மழைநீர் சேகரிப்பு, நீர்வடி மேலாண்மை திட்டத்தை முழுமையாக செயல்படுத்துதல், மரம் வளர்த்தலை ஊக்குவித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
     மேலும் புதிய தடுப்பணைகள் கட்டுதல், குளம் மேம்பாடு செய்தல், நீர் உறிஞ்சி குழிகள் அமைத்தல், கசிவு நீர் குட்டைகள் அமைத்தல், நாற்றங்கால் அமைத்தல், மரக் கன்றுகளை நட்டு பராமரித்தல் போன்ற பல்வேறு பணிகள் செய்ல்படுத்தப்படவுள்ளது. 
     இந்நிலையில் அவிநாசி ஊராட்சி ஒன்றியம், கருமாபாளையம் பெரியதோட்டம் அருகில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 16 லட்சம் மதிப்பில் தடுப்பணை கட்டும் பணி, தெக்கலூர் சமத்துவபுரத்தில் ரூ.1.84 லட்சம் மதிப்பில் நடப்பட்டிருந்த மரக் கன்றுகள், அவிநாசி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு, நடுவச்சேரி, கருக்கன்காட்டு புதூரில் வனத் துறை சார்பில் நடப்பட்டிருந்த மரக் கன்றுகள் ஆகியவற்றை மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறை பொருளாதார ஆலோசர் சுஜாதா சர்மா தலைமையிலான குழுவினர் வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
     தெக்கலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை சுஜாதா சர்மா துவக்கி வைத்தார்.
     இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கி.ரமேஷ்குமார், செயற்பொறியாளர் பிரேம்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்திலட்சுமி, ஹரிகரன், உதவி செயற்பொறியாளர் வெள்ளியங்கிரி, உதவிப்பொறியாளர் கோகுல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     வெள்ளக்கோவிலில்: வெள்ளக்கோவிலில் ஜல் சக்தி அபியான் திட்டப் பணிகள் குறித்து மத்திய அரசின் குழு அதிகாரி பாலகிருஷ்ணன் எஸ்.சயான் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
     வெள்ளக்கோவில் நகராட்சி புதிய பேருந்து நிலையம், வாரச்சந்தை, தனியார் தொழில் நிறுவனங்கள், மேட்டுப்பாளையம், வேலம்பாளையம், வள்ளியிரச்சல் ஊராட்சிகளில் அரசு மற்றும் தனியார் கட்டடங்களின் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள், விவசாய சொட்டு நீர், தெளிப்பு நீர்ப் பாசனங்களை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.  அதைத்தொடர்ந்து நல்லூர்பாளையம் ஓடை தடுப்பணை பணிகளை பார்வையிட்டு ஆலோசனை வழங்கினர். பின்னர், மேட்டுப்பாளையத்தில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி துவக்கி வைக்கப்பட்டது.
     இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி இயக்குநர் (தணிக்கை) பி.எம்.அகமது, துணை இயக்குநர் சுமதி, வெள்ளக்கோவில் நகராட்சி ஆணையர் அ.சங்கர், வேளாண் துறை, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உடனிருந்தனர்.
     காங்கயத்தில்: காங்கயம் அருகே நத்தக்காடையூரில் உள்ள பில்டர்ஸ் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி சென்றனர். இதில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல் பிரிவு) முருகேசன், மத்திய நீர்வள குழும இணை இயக்குநர் ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி செயலர் லட்சுமணன், காங்கயம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ், மீனாட்சி, கல்லூரி முதல்வர் எஸ்.கோபாலகிருஷ்ணன், நாட்டு  நலப்பணித் திட்ட அலுவலர் பேராசிரியர் பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp