பட்டயக் கணக்காளர் விழிப்புணர்வுக் கருத்தரங்கம்
By DIN | Published On : 13th July 2019 07:16 AM | Last Updated : 13th July 2019 07:16 AM | அ+அ அ- |

உடுமலை வித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரியில் பட்டயக் கணக்காளர் (சிஏ) படிப்புக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி அறங்காவலர் விக்ரம் சத்யநாதன் தலைமை வகித்தார். செயலர் பத்மாவதி முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் மருதுபாண்டியன் வரவேற்றார். இதில் தென்னிந்திய பட்டய கணக்காளர் பயிற்சி மையத்தின் தலைவர் ஆடிட்டர் டி.நாககுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, சிஏ படிப்புக்கான வழிமுறைகள், வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கமளித்தார்.
ஆடிட்டர் ஆர்.கந்தசாமி கௌரவ விருந்தினராக பங்கேற்றுப் பேசினார். அதைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் கல்லூரியில் பி.காம். துறை துவக்கி வைக்கப்பட்டது. முடிவில் பேராசிரியர் சாண்டியா நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர் திரளாக கலந்து கொண்டனர்.