மார்க்சிஸ்ட் கட்சியினர் தெருமுனை பிரசாரப் பயணம்
By DIN | Published On : 13th July 2019 07:17 AM | Last Updated : 13th July 2019 07:17 AM | அ+அ அ- |

உடுமலை ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் தெருமுனை பிரசார பயணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
உடுமலையை அடுத்துள்ள ஜிலோபிநாயக்கன்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலாளர் கி.கனகராஜ் தலைமை வகித்தார்.
இதில், உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும், பள்ளி நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும், ஜிலோபிநாயக்கன்பாளையம் ஊராட்சியில் குடிநீர் வசதி செய்து தர வேண்டும், சாலை வசதி, சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்.
நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 16 வகை பொருள்களையும் வழங்க வேண்டும், ஜிலோபிநாயக்கன்பாளையத்தில் பல ஆண்டுகளாக மூடிக் கிடக்கும் நூலகத்தை திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இந்த பிரசார பயணம் ஜிலோபிநாயக்கன்பாளைம், பாலாறுதுறை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நடைபெற்றது.