சுடச்சுட

  


  திருப்பூரில் ஜீவா ஹெல்த் கேர் மற்றும் கவுன்சில் ஆப் இண்டியன் அக்குபஞ்சரிஸ்ட், கியூபிக் ஹெல்த் கேர் ஆகியன சார்பில் இலவச டயாபடிக் நியூரோபதி பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
   ஊத்துக்குளி எஸ்.வி.டி. காம்ப்ளக்ஸில் நடைபெறும் இலவச பரிசோதனை முகாமில் காலில் மரமரப்பு, கால் பாதத்தில் எரிச்சல், நீரிழிவு நோயால் ஏற்பட்டுள்ள நரம்பு கோளாறுகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
  இந்த முகாமில், மருத்துவர்கள் ஏ.கே.வடிவேலு, ஏ.வி.கிருஷ்ணசிவாச்சலபதி, கே.கோதை, எஸ்.அரவிந்த், என்.சாந்தி, சுப்ரமணியம் ஆகியோர் பொதுமக்களுக்கு இலவச பரிசோதனைகளை மேற்கொண்டனர். 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai