சுடச்சுட

  


  பல்லடத்தில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. 
  நவ்ய திஷா அறக்கட்டளை மற்றும் கிராமீன் கூட்டா நிறுவனம் ஆகியவை சார்பில் தண்ணீர் மற்றும் சுகாதாரத்தின் அவசியம் குறித்த முகாம் பல்லடம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தாராபுரம் பகுதி கிளை மேளாளர் வரதராஜன்  தலைமை வகித்தார். பல்லடம் கிளை மேலாளர் கருணாமூர்த்தி வரவேற்றார். முகாமை பல்லடம் தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் விஜய் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
  முகாமில் கை கழுவுதலின் அவசியம், பாதுகாப்பான குடிநீர், திறந்தவெளியில் மலம் கழிக்கக்கூடாது ஏன் என்பது பற்றி நவ்யா திஷா அறக்கட்டளை வளர்ச்சி அலுவலர் விவேக் பேசினார். இதில் கிரெடிட் ஆக்சஸ் கிராமீன் நிறுவன மண்டல மேலாளர் சீனிவாச அஞ்சநேய ரெட்டி,லோகநாதன், ஏரியா மேலாளர் மொகைதீன் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai