சுடச்சுட

  


  திருப்பூர் தமிழ்ப் பண்பாட்டு மையம் சார்பில் தமிழில் பிழையின்றி எழுத மாணவர்களுக்கு தமிழ் மொழிப் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) அளிக்கப்பட உள்ளது. 
  திருப்பூர் தமிழ்ப் பண்பாட்டு மையம் மற்றும் தனியார் நிறுவனம் சார்பில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு தமிழ் மொழிப் பயிற்சியானது குமரன் சாலையில் உள்ள அரிமா சங்கத்தில் இலவசமாக அளிக்கப்பட உள்ளது. 
  இதில், மாணவர்களுக்கு தமிழில் பிழையின்றி எழுதவும், உச்சரிக்கவும் சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தமிழாசிரியை பா.குமுதராஜாமணி பயிற்சி அளிக்கிறார்.இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்ப் பண்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் யோகி செந்தில்குமார் செய்து வருகிறார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai