பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 12 பேர் கைது

திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் புகையிலை, மது, லாட்டரி விற்பனை செய்த 12 பேரை காவல் துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தன


திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் புகையிலை, மது, லாட்டரி விற்பனை செய்த 12 பேரை காவல் துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
திருப்பூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட ராதா நகர் பகுதியில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதன்படி அங்கு சென்று காவல் துறையினர் சோதனை நடத்தினர். அதில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த கடை உரிமையாளர் துர்கை அண்ணன் (48) என்பவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனர். 
இதேபோல, திருப்பூர் ஊரக காவல் நிலையத்துக்கு உள்பட்ட சந்திராபுரம் பகுதியில் புகையிலைப் பொருள் விற்பனைக்கு வைத்திருந்த பிரபாகரன் (23) என்பவரை கைது செய்தனர். இவரிடமிருந்து 44 பாக்கெட் புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அனுப்பர்பாளையம் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பிச்சம்பாளையம் புதூரில் லாட்டரி விற்பனை செய்த பிரபு (32) என்பவர் கைது செய்யப்பட்டார். 
அதே போல, கால்லூரி சாலை, தாராபுரம் சாலை, மங்கலம் சாலை, பல்லடம் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மது விலக்கு காவல் துறையினர் நடத்திய சோதனையில், சட்டவிரோதமாக மது விற்பனை செய்த கோபிராஜ் (22), பிரகாஷ் (26), சுப்பிரமணி (45), செல்வம் (30), காளிதாஸ் (32), முருகேசன் (28), இளையராஜா (27), அய்யப்பன் (45), ரகுநாத் (25) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 100-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com