Enable Javscript for better performance
உடுமலையில் மக்கள் நீதிமன்றம்: 341 வழக்குகளுக்குத் தீர்வு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    உடுமலையில் மக்கள் நீதிமன்றம்: 341 வழக்குகளுக்குத் தீர்வு

    By DIN  |   Published On : 15th July 2019 10:03 AM  |   Last Updated : 15th July 2019 10:03 AM  |  அ+அ அ-  |  

    உடுமலையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 341 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது.
    உடுமலையில் மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், சொத்து வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், சிறுகுற்ற வழக்குகள், வங்கி வாராக் கடன் வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.  உடுமலை வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும், சார்பு நீதிபதியுமான எம்.சுரேஷ் தலைமை வகித்தார். மாவட்ட உரிமையியல் நீதிபதி பி.ராஜா, குற்றவியல் நீதித் துறை நடுவர்( எண் 1) டி.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்குரைஞர்கள் பி.ரம்யா, ஜெ.தம்பிபிரபாரகரன், எம்.மாரிமுத்து, டி.பிரபாகரன், எம்.சிக்கந்தர்பாஷா, ஆர்.ஜோதி சந்திரா ஆகியோர் அடங்கிய மூன்று அமர்வுகளில் விசாரணை நடைபெற்றது. 1,016 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் 341 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டன. இதன் மூலமாக ரூ. 4 கோடியே ஒரு லட்சத்து 24 ஆயிரத்துக்கு
    சமரசத் தீர்வு காணப்பட்டது. வழக்குரைஞர்கள், வாதி, பிரதிவாதிகள் கலந்துகொண்டனர்.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp