உடுமலையில் மக்கள் நீதிமன்றம்: 341 வழக்குகளுக்குத் தீர்வு
By DIN | Published On : 15th July 2019 10:03 AM | Last Updated : 15th July 2019 10:03 AM | அ+அ அ- |

உடுமலையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 341 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது.
உடுமலையில் மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், சொத்து வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், சிறுகுற்ற வழக்குகள், வங்கி வாராக் கடன் வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. உடுமலை வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும், சார்பு நீதிபதியுமான எம்.சுரேஷ் தலைமை வகித்தார். மாவட்ட உரிமையியல் நீதிபதி பி.ராஜா, குற்றவியல் நீதித் துறை நடுவர்( எண் 1) டி.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்குரைஞர்கள் பி.ரம்யா, ஜெ.தம்பிபிரபாரகரன், எம்.மாரிமுத்து, டி.பிரபாகரன், எம்.சிக்கந்தர்பாஷா, ஆர்.ஜோதி சந்திரா ஆகியோர் அடங்கிய மூன்று அமர்வுகளில் விசாரணை நடைபெற்றது. 1,016 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் 341 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டன. இதன் மூலமாக ரூ. 4 கோடியே ஒரு லட்சத்து 24 ஆயிரத்துக்கு
சமரசத் தீர்வு காணப்பட்டது. வழக்குரைஞர்கள், வாதி, பிரதிவாதிகள் கலந்துகொண்டனர்.