விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு
By DIN | Published On : 23rd July 2019 08:21 AM | Last Updated : 23rd July 2019 08:21 AM | அ+அ அ- |

உடுமலை கோட்ட அளவில் (இன்று) செவ்வாய்க்கிழமை நடக்க இருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உடுமலை வருவாய்க் கோட்டாட்சியர் சி.இந்திரவள்ளி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
உடுமலை வருவாய்க் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஜூலை 23 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்தக் கூட்டம் நிர்வாகக் காரணங்களை முன்னிட்டு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.