Enable Javscript for better performance
அவிநாசி பேரூராட்சியில் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்- Dinamani

சுடச்சுட

    

    அவிநாசி பேரூராட்சியில் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

    By DIN  |   Published on : 25th July 2019 09:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அவிநாசி பேரூராட்சி பகுதிகளில் மரக் கன்று நடும் பணி செவ்வாய்க்கிழமை துவங்கியது.
     முதல்கட்டமாக அவிநாசி பேரூராட்சி, நியூ டவுன் பகுதியில் 60 சென்ட் நிலத்தில், மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்நிகழ்ச்சியை பேரூராட்சி செயல் அலுவலர் ஈஸ்வரமூர்த்தி துவக்கி வைத்தார். இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறியது:
     வறட்சியைத் தாங்கக் கூடியதும், மருத்துவ குணமிக்கதுமான கொன்றை, விளா, வாகை, இலுப்பை, மருது, ஓதியல், கருங்காலி, ஆயம், கன்னிரா, வேம்பு, புங்கன், நரிவிழி உள்ளிட்ட 31 வகையான மரக்கன்றுகள் நடப்படுகிறது.
     இரு நாள்கள் நடைபெறும் இப்பணியில் 300-க்கும் மேற்பட்ட மரங்களை நடவுள்ளோம். இவற்றுக்கு சொட்டுநீர்ப் பாசன வசதியும், கால்நடைகளிடமிருந்து மரக்கன்றுகளை பாதுகாக்க வேலியும் அமைக்கப்படவுள்ளது. மரம் வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில் பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்களுக்கு மரக் கன்றுகளை வழங்கி வருகிறோம் என்றனர்.
     இந்நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் கருப்புசாமி, சமூக ஆர்வலர்கள், தூய்மை காவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai