Enable Javscript for better performance
ஆம்புலன்ஸ் மோதி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு- Dinamani

சுடச்சுட

    

    ஆம்புலன்ஸ் மோதி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு

    By DIN  |   Published on : 25th July 2019 10:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆம்புலன்ஸ் மோதி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தனியார் காப்பீட்டு நிறுவனம் சார்பில் ரூ.50 லட்சம் இழப்பீட்டுத் தொகை புதன்கிழமை வழங்கப்பட்டது. 
    கோவை மாவட்டம், சின்னியம்பாளையத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் (48). இவர் சிங்காநல்லூர் அருகே இரு சக்கர வாகனத்தில் 2018 அக்டோபர் 27 ஆம் தேதி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸ் வாகனம் மோதியதில் மாரியப்பன் உயிரிழந்தார். 
    இதையடுத்து, மாரியப்பனின் மனைவி பத்மினி, தாயார் கிருஷ்ணவேணி ஆகியோர் தனியார் நிறுவனத்தின் மீது ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில், மக்கள் நீதிமன்றத்தின் மூலமாக இந்த வழக்கில் சமரசத் தீர்வு காணப்பட்டது.  இதன்படி மாரியப்பனின் குடும்பத்தினரிடம் ரூ.50 லட்சம் இழப்பீட்டுத் தொகைக்கான உத்தரவாதக் கடிதத்தை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலர் ஸ்ரீவித்யா புதன்கிழமை வழங்கினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai