Enable Javscript for better performance
இலக்கியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    இலக்கியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு

    By DIN  |   Published on : 25th July 2019 09:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திறனறி மற்றும் கலை இலக்கியப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற உடுமலை சீனிவாசா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
    உடுமலை இந்திய மருத்துவ சங்க கட்டடத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான திறனறி மற்றும் கலை இலக்கியப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. இதில் உடுமலை வட்டத்தில் 25 க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
    இதில் உடுமலை காந்திநகர் சீனிவாசா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் விநாடி வினா, குரலிசை, ஓவியப் போட்டி, நடனம் மற்றும் கலை இலக்கிய போட்டிகளில் பங்கேற்று சிறப்பிடம் பெற்றனர். 
    இதையடுத்து, பள்ளிக்கு ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டது. இந்நிலையில் சாம்பியன் பட்டம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
    இதில் பரிசு பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் உறுதுணையாக இருந்த ஆசிரியர்களை பள்ளித் தாளாளர்  விக்னேஷ் ஆர்.ரங்கநாதன், முதல்வர் ஜாஸ்மின் ஜேக்கப், மேலாளர் ஜவஹர் உள்ளிட்டோர் பாராட்டினர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai