Enable Javscript for better performance
எம்.ஜி.புதூர் பள்ளியை இடமாற்றம் செய்யக் கூடாது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    எம்.ஜி.புதூர் பள்ளியை இடமாற்றம் செய்யக் கூடாது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

    By DIN  |   Published on : 25th July 2019 09:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள  எம்.ஜி.புதூர் மாநகராட்சிப் பள்ளியை இடமாற்றம் செய்யக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியள்ளது. 
    இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு மாநகரச் செயலாளர் டி.ஜெயபால், தமிழக முதல்வருக்கு புதன்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
    திருப்பூர் எம்.ஜி.புதூரில் 70 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பப் பள்ளி தொடக்கப்பட்டு தற்போது அந்தப் பள்ளி நடுநிலைப் பள்ளியாக உயர்ந்துள்ளது. இந்தப் பள்ளி துவங்கிய ஆரம்ப காலத்தில் எம்.ஜி. புதூர், தட்டான்தோட்டம், காமாட்சியம்மன் கோயில் வீதி, துளசிராவ் வீதி, மரக்கடை சந்து உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து படித்தனர். தற்போது இந்தப் பள்ளியில் 200 மாணவர்கள் வரை படித்து வருகிறார்கள். 
    இந்த நிலையில், ஸ்மார்ட் சிட்டி, வளர்ச்சி என்ற பெயரைச் சொல்லி இப்பள்ளியை அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முயற்சித்து வருகிறது. கடைக்கோடியில் உள்ள மக்கள், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் குழந்தைகள் படிப்பதற்கு பயன்பட்டு வரும் இப்பள்ளியை அப்புறப்படுத்தப் போவதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
    சாதாரண ஏழை, எளிய மக்கள், தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி பயில முத்துப்புதூர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி என்ற பெயரில் அதே இடத்தில் பள்ளி தொடர வேண்டும் என மக்களிடம் எதிர்பார்ப்பு உள்ளது. இப்பள்ளிக்கான இடத்தை விட்டுவிட்டு மீதமுள்ள இடத்தில் பழைய பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். பள்ளிக்குள் உள்ள இதர அரசு அலுவலகங்களை மாறுதல் செய்ய வேண்டும். 
    திருப்பூர் மாநகரின் மையப்பகுதியில் உள்ள இந்தப்பள்ளி இங்கே தொடரவும், பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai