Enable Javscript for better performance
கத்தியைக் காட்டி மிரட்டி  இரு சக்கர வாகனத்தைப் பறித்த 4 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கத்தியைக் காட்டி மிரட்டி  இரு சக்கர வாகனத்தைப் பறித்த 4 பேர் கைது

    By DIN  |   Published on : 25th July 2019 10:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெருமாநல்லூர் அருகே கத்தியைக் காட்டி மிரட்டி இருசக்கர வாகனம் மற்றும் செல்லிடப் பேசியைப் பறித்துச் சென்ற 4 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
    ஈரோடு மாவட்டம், கோபி குளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் மகன் சங்கர் (23). இவரும் இவரது நண்பர் ஜெபஸ்டின் என்பவரும் பெருமாநல்லூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை காலை வந்து கொண்டிருந்தனர். 
    பெருமாநல்லூர் அருகே வரும்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கத்தியைக் காட்டி மிரட்டி  சங்கர், ஜெபஸ்டின் ஆகியோர் வந்த இரு சக்கர வாகனம், அவர்களின் செல்லிடப்பேசிகள் ஆகியவற்றைப் பறித்துச் சென்றனர். இதுகுறித்து பெருமாநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். 
    இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய பெருமாநல்லூர் அருகே தட்டான்குட்டை பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் (39), ரஞ்சித்குமார் (24), பர்தா(எ)சதீஷ் (22), விநோத்குமார் (24) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் ரஞ்சித்குமார் ஏற்கெனவே, 16க்கும் மேற்பட்ட திருட்டு வழக்கில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 3 இரு சக்கர வாகனங்கள், செல்லிடப்பேசி ஆகியவற்றை போலீஸார் பறிமுதல்  செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai