Enable Javscript for better performance
கார், இரு சக்கர வாகனங்களைத் திருடியவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    திருப்பூரில் வாகனத் திருட்டில் ஈடுபட்ட ஒருவரை காவல் துறையினர் புதன்கிழமை கைது செய்தனர். இவரிடமிருந்து 2 கார், 5 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். 
    திருப்பூர் தெற்கு காவல் எல்லைக்கு உள்பட்ட தென்னம்பாளையம், சந்தைபேட்டை, ஈஸ்வரன் கோயில் வீதி, அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த கார், இரு சக்கர வாகனங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக புகார்கள் வரத் தொடங்கின. 
    இதையடுத்த திருப்பூர் தெற்கு காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இதில், திருப்பூர் கோயில் வழியைச் சேர்ந்த ஆர்.கமலக்கண்ணன்(33) என்பவர் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை புதன்கிழமை கைது செய்த காவல் துறையினர் அவரிடமிருந்து 2 கார்கள், 5 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai