Enable Javscript for better performance
குண்டடம் அருகே நாளை கால்நடை பாதுகாப்பு  திட்ட முகாம்- Dinamani

சுடச்சுட

    

    குண்டடம் அருகே சிறப்பு கால்நடை பாதுகாப்புத் திட்ட முகாம் வரும் வெள்ளிக்கிழமை நடைபெற  உள்ளது.
    இதுகுறித்து தொட்டியன்துறை கால்நடை உதவி மருத்துவர் ரவிகுமார் கூறியதாவது: 
    குண்டடத்தை அடுத்த முத்தயம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட நல்லிபாளையம் மாரியம்மன் கோயில் அருகே வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 26) காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை சிறப்பு கால்நடை பாதுகாப்புத் திட்ட முகாம் நடைபெறவுள்ளது. 
    இந்த முகாமில் மருத்துவ சிகிச்சை, அறுவை சிகிச்சை, குடற்புழு நீக்கம், சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், கால்நடைகளுக்கு தடுப்பூசி, சினை தரிக்காத கால்நடைகளுக்கு சிறப்பு சிகிச்சை, நோய் மாதிரி பொருள்கள் பரிசோதனை, கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 
    மேலும், இந்த முகாமில் சிறந்த பசு மற்றும் எருமைக் கன்றுகளுக்கு பரிசுகளும் வழங்கப்படுகின்றன. அத்துடன் ஹைட்ரோபோனிக் மற்றும் அசோலா கால்நடை தீவன வளர்ப்பு முறை பற்றிய செய்முறை விளக்கமும் அளிக்கப்பட உள்ளது. ஆகவே, இந்தப் பகுதியில் கால்நடை வளர்ப்பவர்கள் இந்த முகாமைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று  தெரிவித்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai