Enable Javscript for better performance
குண்டடம் அருகே பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    திருப்பூர் மாவட்டம், குண்டடத்தை அடுத்த மானூர்பாளையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் தடை செய்யப்பட்ட 13.5 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள்  பறிமுதல் செய்யப்பட்டன.
    குண்டடம் அருகே சடையபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட மானூர்பாளையம் பகுதியில் உள்ள மளிகை உள்ளிட்ட சில கடைகளில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழ்ச்செல்வி, ஊராட்சி செயலாளர் சுமதி மற்றும் ஊராட்சி பணியாளர்கள் அண்மையில் சோதனை நடத்தினர்.
    அப்போது, கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களான டீ கப்புகள், பைகள் உள்ளிட்ட பொருள்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மொத்தம் 13.5 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடை உரிமையாளர்களிடம் இருந்து ரூ.1,800 அபராதம் வசூலித்தனர். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai