Enable Javscript for better performance
குப்பைக்குத் தீ:  பொதுமக்கள் புகார்- Dinamani

சுடச்சுட

    

    வெள்ளக்கோவில் வேலப்பநாய்க்கன்வலசு ஊராட்சிப் பகுதியில் குப்பைகளுக்கு தீ வைப்பதால் புகை ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
    இந்த ஊராட்சியைச் சேர்ந்த ராமலிங்கபுரம், சிபி நகர், வாய்க்கால்மேட்டுப்புதூர், அய்யனூர் பகுதிகளில் தினமும் துப்புரவுப் பணியாளர்கள் வீடுகள், தொழிற்சாலைகளுக்கு நேரடியாகச் சென்று குப்பை வண்டிகள் மூலம் குப்பைகளைச் சேகரித்து வருகின்றனர்.
     இவற்றில் மக்கும் குப்பைகள், பாலித்தீன் போன்ற மக்காத குப்பைகளை அரசு வகுத்துக் கொடுத்துள்ள விதிமுறைப்படி தனித்தனியாகப் பிரித்து முறைப்படி அப்புறப்படுத்த வேண்டும். ஆனால், இதனைக் கடைப்பிடிக்காமல் துப்புரவுப் பணியாளர்களே குப்பைத் தொட்டிகளுக்கு அருகில் குப்பைகளைக் கொட்டித் தீ வைத்து எரித்து வருகின்றனர்.
    இதனால் புகை ஏற்பட்டு சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.
    இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவுறுத்தியும் வேலப்பநாய்க்கன்வலசு ஊராட்சி நிர்வாகம் இதனைக் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக இருந்து வருகிறது. இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai