Enable Javscript for better performance
குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 16 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    திருப்பூர் மாவட்டத்தில் மது, லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்த 16 பேரை தனிப்படையினர் புதன்கிழமை கைது செய்தனர். இவர்களிடமிருந்து 296 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். 
    திருப்பூர் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் காவல் கண்காணிப்பாளர் அ.கயல்விழி உத்தரவின்பேரில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்தத் தனிப்படையினர் சட்ட விரோத மது, லாட்டரி விற்பனை தொடர்பாக புதன்கிழமை பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் அவிநாசி, பெருமாநல்லூர், சேவூர், உடுமலை, தாராபுரம், பல்லடம், காமநாயக்கன்பாளையம், அலங்கியம், குண்டடம் ஆகிய காவல் நிலைய எல்லைகளில் நடத்தப்பட்ட சோதனையில் மது, லாட்டரி, கள் விற்பனை செய்ததாக 16 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களைக் கைது செய்தனர். 
    இவர்களிடமிருந்து 294 மது பாட்டில்கள், 5 லிட்டர் கள், 12 கேரள லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ. 5,950 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai