Enable Javscript for better performance
சாலையில் கொட்டப்படும் சாயக் கழிவுகளால் சுகாதார சீர்கேடு- Dinamani

சுடச்சுட

    

    சாலையில் கொட்டப்படும் சாயக் கழிவுகளால் சுகாதார சீர்கேடு

    By DIN  |   Published on : 25th July 2019 09:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அவிநாசி அருகே சாலைகளில் சாய ஆலை கழிவுகளை சிலர் கொட்டிச் செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 
    இது குறித்து திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியத்துக்கு உள்பட்ட புலிப்பார் ஊராட்சி பொதுமக்கள் கூறியதாவது:
    அவிநாசியை அடுத்த சேவூரில் இருந்து நம்பியூர் செல்லும் வழியில் உள்ளது கூட்டப்பள்ளி. இந்தப் பகுதியில் இரவு நேரங்களில் சிலர் திருப்பூர் சாய ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை கொண்டுவந்து சாலை ஒரங்களில் கொட்டிச் செல்கின்றனர். 
    இது குறித்து அரசு அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், தங்களது பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன், கழிவுகளில் இருந்து வரும் துர்நாற்றத்தால் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி சாயக் கழிவுகளைக் கொட்டிச் செல்லும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai