Enable Javscript for better performance
சிக்கண்ணா கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சாலை பாதுகாப்பு மற்றும் பகடிவதை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
    திருப்பூர் மாநகர காவல் துறையும், சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்டம் ஆகியவை இணைந்து சாலை பாதுகாப்பு மற்றும் பகடிவதை விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) புஷ்பலதா தலைமை வகித்தார். நாட்டு நலப் பணித் திட்ட அலகு 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார்.
     இதில், திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையர் உமா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகையில்,  மாணவர்கள் சட்டத்தை கடைபிடிக்க வேண்டும். பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் மதிக்க வேண்டும், பகடிவதையில் ஈடுபடக்கூடாது. ஜூனியர் மாணவர்களை அன்பாக நடத்த வேண்டும். ஓட்டுநர் உரிமம் இல்லாமலும், தலைக்கவசம் அணியாமலும் வாகனங்களை இயக்கக்கூடாது என்றார்.  
    இதில், வடக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் நாகராஜன் போக்குவரத்து விதிகள் பற்றியும், 15 வேலம்பாளையம் காவல் ஆய்வாளர் பி.என்.ராஜன் பகடிவதையால் மாணவர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்றும் விளக்கிப் பேசினர். உதவி ஆணையர்கள் கஜேந்திரன், சுரேஷ், பேராசியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai