Enable Javscript for better performance
சேவூரை தலைமையிடமாகக் கொண்டு ஊராட்சி ஒன்றியம் அமைக்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    சேவூரை தலைமையிடமாகக் கொண்டு ஊராட்சி ஒன்றியம் அமைக்க வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 25th July 2019 09:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அவிநாசி ஒன்றியத்தை இரண்டாகப் பிரித்து, சேவூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்க அரசு ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
     தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அவிநாசி வட்ட கிளை 13ஆவது மாநாடு தனியார் திருமண மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. மாநாட்டுக்கு வட்டக் கிளைத் தலைவர் பி. ரமேஷ் தலைமை வகித்தார்.
     ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியம் மீதான பணி நீக்க நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அவிநாசி ஒன்றியத்தை இரண்டாகப் பிரித்து, சேவூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டும். நெடுஞ்சாலைத் துறையில் தனியார் பராமரிப்பை கைவிட்டு, அரசே ஏற்று நடத்த வேண்டும். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் 
    நிறைவேற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai