Enable Javscript for better performance
தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்: திருப்பூரில் நாளை நடைபெறுகிறது- Dinamani

சுடச்சுட

    

    தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்: திருப்பூரில் நாளை நடைபெறுகிறது

    By DIN  |   Published on : 25th July 2019 09:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் தனியார் துறை சார்பில் திருப்பூரில் வெள்ளிக்கிழமை (ஜூலை 26) வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
    இதுதொடர்பாக மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
    மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம், தனியார் துறை ஆகியவை சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் தனியார்துறை வேலையளிப்பவர்கள் கலந்துகொண்டு பயனாளிகளைத் தேர்வு செய்யவுள்ளனர். இதனால் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள், ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்கள், ஓட்டுநர்கள் மற்றும் தையல் பயிற்சி பெற்றவர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம். 
    வேலைவாய்ப்பு முகாமுக்கு வரும்போது தங்களது பதிவில் குறைகள் கண்டறியப்பட்டால் அதனை சரிசெய்து கொள்வதோடு கூடுதல் கல்வித் தகுதியையும் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், தகுதியிருப்பின் வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை பெறவும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai