Enable Javscript for better performance
தமிழில் பயின்றவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை அளிக்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    தமிழில் பயின்றவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை அளிக்க வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 25th July 2019 09:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழில் பயின்றவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்க வேண்டும் என அனைத்து தமிழ் அமைப்பினர் வலியுறுத்தியள்ளனர்.
    தமிழர் பண்பாடு கலாசாரப் பேரவை சார்பில் திருப்பூர், கோவை மாவட்ட  அனைத்து தமிழ் அமைப்புகள் கருத்துக் கேட்புக் கூட்டம் அவிநாசியில் அண்மையில் நடைபெற்றது.
    நிகழ்ச்சிக்கு பேரவைத் தலைவர் கா.நடராஜன் தலைமை வகித்தார். அனைத்துப் பள்ளிகளிலும் 8 ஆம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும். தமிழில் பயின்றவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்க வேண்டும்.
    வணிக வளாகங்கள், அங்காடிகளில் உள்ள பெயர்களை தமிழுக்கு மாற்ற வேண்டும். திருக்கோயில்களில் தமிழில் வழிபாடு செய்து கொள்ளலாம் என்ற சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
    நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழைப் பயன்படுத்த வேண்டும். மத்திய அரசு அலுவலக தேர்வுகளை தமிழிலும் எழுத அனுமதிக்க வேண்டும். மாநில கல்விக் கொள்கையில் மத்திய அரசு தலையிடக் கூடாது.
    ஹிந்தி திணிப்பு கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறை வேண்டும்.
    இந்தக் கோரிக்கைகளை செப்டம்பர் 25 ஆம் தேதிக்குள் நிறைவேற்றாவில்லை என்றால் திருப்பூர், கோவை மாவட்ட அளவிலான தமிழ் அமைப்புகள், பொதுமக்கள் மாணவர்கள் திரண்டு கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தில் ஈடுபடுவது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    பேரவைச் செயலாளர் க.செ.வெங்கடாசலம்,  பொதுச் செயலாளர் நா.சுப்பிரமணியன், துணைத் தலைவர் அ.சி.பழனிசாமி, பொறுப்பாளர் அருணாசலம், பணி நிறைவு ஆசிரியர் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் செ.சுப்பிரமணியன், தமிழ் சங்கப் பொறுப்பாளர் ந.கணேசன் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்பினர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai