Enable Javscript for better performance
புதிய நியாயவிலைக் கடையை திறக்கக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    சிவன்மலை அருகே கட்டி முடித்து தயார் நிலையில் உள்ள நியாயவிலைக் கடையை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    காங்கயம் ஒன்றியம், சிவன்மலை ஊராட்சிக்கு உள்பட்ட கோவில்பாளையம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் நியாய விலைக் கடை கட்ட வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். 
    இதையடுத்து வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வந்த நியாயவிலைக் கடைக்கு சிவன்மலை தொடக்க வேணாண்மை கூட்டுறவு சங்கத்தின் சார்பில் புதிய கட்டடம் கட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், இந்த புதிய கட்டடத்தில் நியாயவிலைக் கடை செயல்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai