Enable Javscript for better performance
மாநகராட்சிப் பள்ளியில் சதுரங்கப் போட்டி- Dinamani

சுடச்சுட

    

    தமிழக அரசின் பள்ளி கல்வித் துறை சார்பில் திருப்பூர் நொய்யல் வீதியில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் சதுரங்கப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன.
    இதில், 14, 17 வயதுக்கு உள்பட்ட மாணவ, மாணவியருக்குத் தனித்தனியாகப் போட்டிகள் நடைபெற்றன. இதில், 14 வயதுக்கு உள்பட்ட மாணவர்கள் பிரிவில் 14 பேர், மாணவியர் பிரிவில் 12 பேர் பங்கேற்றனர். அதேபோல் 17 வயதுக்கு உள்பட்ட மாணவர்கள் பிரிவில் 8 பேர், மாணவியர் பிரிவில் 6 பேர் என மொத்தம் 40 பேர் பங்கேற்றனர். 
    இதில், 14 வயதுக்கு உள்பட்ட மாணவர்கள் பிரிவில் எஸ்.உமர்முக்தர் முதலிடமும், என்.அசதுல்லா இரண்டாவது இடத்தையும், மாணவியர் பிரிவில் எம்.ரெஜினா பேகம் முதலிடத்தையும், ஏ.ஜூமனா இரண்டாவது இடத்தையும் பிடித்தனர். 
    அதே போல், 17 வயதுக்கு உள்பட்ட மாணவர்கள் பிரிவில் எஸ்.நாகூர் மீரான் முதலிடத்தையும், எஸ்.காதர்மஸ்தான் இரண்டாவது இடத்தையும், மாணவிகள் பிரிவில் எஃப்.ராபியா பஸ்ரி முதலிடத்தையும், கே.சத்தியதர்ஷினி இரண்டாவது இடத்தையும் பிடித்தனர். 
    இதையடுத்து, போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பள்ளி தலைமை ஆசிரியை டி.வித்யா பரிசு வழங்கினார். இந்தப் போட்டிகளில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியர் ஆகஸ்ட் 8 ஆம் தேதி நடைபெறவுள்ள திருப்பூர் தெற்கு குறுமைய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai