Enable Javscript for better performance
மாநில அளவிலான யோகாசனப் போட்டி: திருப்பூர் பள்ளி மாணவர்கள் தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    மாநில அளவிலான யோகாசனப் போட்டி: திருப்பூர் பள்ளி மாணவர்கள் தேர்வு

    By DIN  |   Published on : 25th July 2019 10:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாநில அளவிலான யோகாசனப் போட்டிக்கு திருப்பூர் பிரண்ட்லைன் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
    வேலூர் மாவட்ட யோகா அசோசியேஷன் சார்பில் பூங்கோடு ஸ்ரீ சதீஸ்வரர் பாலிடெக்னிக் கல்லூரியில் யோகாசனப் போட்டி நடைபெற்றது. இதில் 115க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில், ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை திருப்பூர் பிரண்ட் லைன் மில்லேனியம் பள்ளியும், இரண்டாவது இடத்தை ஆரணி அருகே உள்ள கஸ்தம்பாடி பிங்க்ஸ் பப்ளிக் பள்ளியும்,  3ஆவது இடத்தை அரக்கோணம் பாரதிதாசனார் பள்ளியும் பிடித்தன. 
    இப்போட்டியில், தனிநபர் பிரிவில் திருப்பூர் பிரண்ட்லைன் மில்லேனியம் மாணவர்கள் 21 பேர் கலந்து கொண்டனர். இந்த மாணவர்கள் அனைவரும் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும்,யோகாசானப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை பிரண்ட்லைன் பள்ளி தாளாளர் சிவசாமி, செயலாளர் சிவகாமி, இயக்குநர் சக்திநந்தன், இணைச்செயலாளர் வைஷ்ணவி, பள்ளி முதல்வர் துரைராஜ் ஆகியோர் பாராட்டினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai