Enable Javscript for better performance
முன்னாள் மாணவர்களுக்கு டி.இ.ஏ. பப்ளிக் பள்ளி அழைப்பு- Dinamani

சுடச்சுட

    

    திருப்பூர் பழங்கரையில் உள்ள டி.இ.ஏ. பப்ளிக் பள்ளியில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி நடைபெறும் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்க முன்னாள் மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
    இதுதொடர்பாக பள்ளி முதல்வர் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
    திருப்பூர் பழங்கரையில் உள்ள டி.இ.ஏ. பப்ளிக் பள்ளியின் வெள்ளி விழாக் கொண்டாட்டத்தை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 2 ஆம் தேதி மாலை 5 மணி அளவில் பள்ளி வளாகத்தில் முன்னாள் மாணவர்கள் பங்கேற்கும் செயற்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. ஆகவே, இந்தப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் இந்த செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai