Enable Javscript for better performance
மூலனூர் அருகே குழாய் உடைந்து வீணாகும் காவிரி கூட்டுக் குடிநீர்- Dinamani

சுடச்சுட

    

    மூலனூர் அருகே குழாய் உடைந்து வீணாகும் காவிரி கூட்டுக் குடிநீர்

    By DIN  |   Published on : 25th July 2019 09:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூர் அருகே காவிரி கூட்டுக் குடிநீர் வெளியேறி வீணாகி வருகிறது. 
     வெள்ளக்கோவில் - கொடுமுடி சாலையில் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்ட குடிநீர் விநியோகக் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இதில் ராக்கியாவலசு அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு குழாய் உடைந்து குடிநீர் அதிக அளவில் வெளியேறி காட்டுப்பகுதியில் தேங்கி நிற்கிறது.
     இந்தக் குழாய் உடைப்பால் மூலனூர், கொளத்துப்பாளையம், சுண்டக்காம்பாளையம் பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில் இவ்வாறு குடிநீர் வீணாகி வருவதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். எனவே, குழாய் உடைப்பை உடனடியாகச் சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai