Enable Javscript for better performance
ரூ. 14.27 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை- Dinamani

சுடச்சுட

    

    வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் ரூ. 14.27 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை புதன்கிழமை நடைபெற்றது.  
     இங்கு வாரந்தோறும் கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த வார ஏலத்துக்கு திருச்சி, அரியலூர், பழனி, வேடசந்தூர், பரமத்தி வேலூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 45 விவசாயிகள் தங்களுடைய 378 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர். இவற்றின் எடை 19,247 கிலோ. வெள்ளக்கோவில், காங்கயம், முத்தூரிலிருந்து 10 வணிகர்கள் வந்திருந்தனர்.  விற்பனைக் கூடக் கண்காணிப்பாளர் ரா.மாரியப்பன் முன்னிலையில் நடந்த ஏலத்தில் கிலோ ரூ. 53.70 முதல் ரூ. 90.90 வரை விற்பனையானது. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 14 லட்சத்து 27 ஆயிரத்து 13 அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai