Enable Javscript for better performance
வாகனம் மோதி விவசாயி பலி- Dinamani

சுடச்சுட

    

    வெள்ளக்கோவில் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் விவசாயி புதன்கிழமை உயிரிழந்தார்.
    காங்கயம், சம்பந்தம்பாளையம் அருகேயுள்ள மேட்டுப்பாறையைச் சேர்ந்தவர் காமராஜ் (60), விவசாயி. இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகி விட்டது. இவருடைய மகள் கரூர் மாவட்டம், தென்னிலை அருகேயுள்ள மொஞ்சனூர் மீனாட்சிவலசில் உள்ளார். காமராஜ் தனது மகள், மருமகனைப் பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் தனது வீட்டிலிருந்து புறப்பட்டு மீனாட்சிவலசுக்குச் சென்று கொண்டிருந்தார்.
    வெள்ளக்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் ஓலப்பாளையம் கண்ணபுரம் பிரிவருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த காமராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    இதுகுறித்து வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai