Enable Javscript for better performance
விமானப் படை வீரர்கள் திடீர் ஒத்திகை: உப்பாறு அணை அருகே பரபரப்பு- Dinamani

சுடச்சுட

    

    விமானப் படை வீரர்கள் திடீர் ஒத்திகை: உப்பாறு அணை அருகே பரபரப்பு

    By DIN  |   Published on : 25th July 2019 10:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உப்பாறு அணைப் பகுதியில் சூலூர் விமானப் படை வீரர்கள் 10க்கும் மேற்பட்டோர் போர் பயிற்சி ஒத்திகையில் புதன்கிழமை ஈடுபட்டனர். 
    திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ளது உப்பாறு அணைப் பகுதி. இங்குள்ள பனைமரத்துப்பாளையம் என்ற இடத்துக்கு சூலூர் விமானப் படை தளத்தில் இருந்து 3 ஹெலிகாப்டர்கள் புதன்கிழமை வந்தன. இதில், இரண்டு ஹெலிகாப்டர்கள் வானில் வட்டமடித்துக் கொண்டிருக்கும்போது, ஒரு ஹெலிகாப்டர் மட்டும் தரை இறக்கப்பட்டு 10 வீரர்கள் நவீன ஆயுதங்களுடன் போர் பயிற்சி ஒத்திகையில் ஈடுபட்டனர். 
    எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஹெலிகாப்டரை தரை இறக்கி விமானப் படை வீரர்கள் ஒத்திகையில் ஈடுபட்டதால் அப்பகுதி மக்களிடையே அச்சமும், பரபரப்பும் ஏற்பட்டது. 
    இதேபோல் கடந்த 17ஆம் தேதியில் திடீரென இரண்டு ஹெலிகாப்டர்களில் வந்த வீரர்கள் அங்கு இறங்கி பயிற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai