Enable Javscript for better performance
வேடப்பட்டியில் மக்கள் தொடர்பு முகாம்: 314 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்- Dinamani

சுடச்சுட

    

    வேடப்பட்டியில் மக்கள் தொடர்பு முகாம்: 314 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

    By DIN  |   Published on : 25th July 2019 09:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மடத்துக்குளம் வட்டம் வேடப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு மக்கள் தொடர்பு முகாமில் 314 பயனாளிகளுக்கு ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன. 
    முகாமுக்கு உடுமலை கோட்டாட்சியர் சி.இந்திரவள்ளி தலைமை வகித்தார். வட்டாட்சியர் பழனியம்மாள் முன்னிலை வகித்தார். விழாவில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினார்.
    முகாமில் உழவர் பாதுகாப்பு திட்டம், திருமண உதவித் திட்டம், இயற்கை மரணத்துக்கான உதவித் தொகை, உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விபத்து நிவாரணம், முதியோர் உதவித் தொகை, இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வேளாண் இடு பொருள்கள் என பல்வேறு திட்டங்களில் 314 பயனாளிகளுக்கு ரூ. 42 லட்சத்து 34 ஆயிரம் மதிப்புள்ள நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 
    முன்னதாக வேளாண் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், சமூக நலத் துறை, பொது சுகாதாரம், தோட்டக் கலைத் துறை, ஊரக வளர்ச்சி முகமை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
    நிகழ்ச்சியில் அனைத்துத் துறை அதிகாரிகளும் தங்களது துறை வாரியான நலத் திட்டங்கள் குறித்துப் பேசினர். கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் பெருமாள்சாமி, மாவட்ட வழங்கல் அதிகாரி முருகன்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai