Enable Javscript for better performance
1,598 மாணவர்களுக்கு மடிக்கணினிகள்: எம்எல்ஏ கரைப்புதூர் ஏ.நடராஜன் வழங்கினார்- Dinamani

சுடச்சுட

    

    1,598 மாணவர்களுக்கு மடிக்கணினிகள்: எம்எல்ஏ கரைப்புதூர் ஏ.நடராஜன் வழங்கினார்

    By DIN  |   Published on : 25th July 2019 09:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் மேல்நிலைக் கல்வி பயிலும் 1,598 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1.66 கோடி மதிப்பில் மடிக்கணினிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
    கேத்தனூர் அரசு  மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவுக்கு பல்லடம் கல்வி மாவட்ட அலுவலர் ஆனந்தி தலைமை வகித்தார். பொங்கலூர் ஒன்றிய முன்னாள் தலைவர் எஸ்.சிவாச்சலம், துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    கேத்தனூர் முன்னாள் ஊராட்சித் தலைவர் வி.ஹரிகோபால் வரவேற்றார். இதில் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கி, பல்லடம் எம்எல்ஏ கரைப்புதூர் ஏ.நடராஜன் பேசினார்.
    இவ்விழாவில் கூட்டுறவு வங்கித் தலைவர் ஏ.சித்துராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் வாவிபாளையம் அனந்தகிருஷ்ணன், ஜெய்சுந்தர், காட்டூர் சிவபிரகாஷ், பள்ளி தலைமை ஆசிரியைகள் ஆனந்தி(பெருந்தொழுவு), அனிதா (பொல்லிகாளிபாளையம்), கீதா (வே.கள்ளிப்பாளையம்), ஜெயசீலி(கேத்தனூர்), பிரேமா (கொடுவாய்), பிரேமலதா (பொங்கலூர்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai