முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
By DIN | Published On : 30th July 2019 08:35 AM | Last Updated : 30th July 2019 08:35 AM | அ+அ அ- |

வெள்ளக்கோவில் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் திங்கள்கிழமை பிரதோஷ சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
வெள்ளக்கோவிலில் மூலனூர் சாலையிலுள்ள தெய்வநாயகி உடனமர் சோளீஸ்வர சுவாமி கோயில், மயில்ரங்கம் வைத்தியநாதேஸ்வரர் கோயில், லக்கமநாய்க்கன்பட்டி, கண்ணபுரம் ஆகிய ஈஸ்வரன் கோயில்களில் பிரதோஷ வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்தக் கோயில்களில் நந்தியம் பெருமானுக்கு புதிதாகப் பட்டாடை உடுத்தி, பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர் அபிஷேகம் செய்து வழிபாடுகள் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்தப் பகுதியில் உள்ள பிரதோஷ வழிபாட்டுக் குழுவினர் செய்திருந்தனர்.