முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
வெள்ளக்கோவிலில் போதைப் பாக்குகள் விற்ற 2 பேர் கைது
By DIN | Published On : 30th July 2019 08:36 AM | Last Updated : 30th July 2019 08:36 AM | அ+அ அ- |

வெள்ளக்கோவிலில் உள்ள கடைகளில் போதைப் பாக்குகள் விற்றதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட போதைப் பாக்குகள் பெட்டிக் கடைகள், தேநீர் கடைகள், மளிகைக் கடைகளில் மறைமுகமாக விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில், திருப்பூர் மாவட்ட எஸ்.பி. தனிப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் கார்த்திக்தங்கம், போலீஸார் வெள்ளக்கோவிலில் திங்கள்கிழமை இரவு 9 மணி அளவில் திடீர் சோதனை நடத்தினர்.
இதில், காங்கயம் சாலை இரட்டைக்கிணறு அங்காளம்மன் கோயில் அருகிலுள்ள கோபிநாத் (19) என்பவருடைய மளிகைக் கடை, காங்கயம் சாலை பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள செல்லமுத்து என்பவருடைய தேநீர் கடையில் தடை செய்யப்பட்ட போதைக் பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து செல்லமுத்து தேநீர் கடையில் வேலை செய்யும் வெள்ளக்கோவில் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த சிவானந்தம் (60), மளிகைக் கடை உரிமையாளர் கோபிநாத் இருவரையும் கைது செய்தனர்.