" மாணவர்களுக்கு உடனடியாக மடிக்கணினி வழங்க வேண்டும்'

தமிழகம் முழுவதும் உள்ள  அரசுப் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1,  பிளஸ் 2 மாணவர்கள் அனைவருக்கும்

தமிழகம் முழுவதும் உள்ள  அரசுப் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1,  பிளஸ் 2 மாணவர்கள் அனைவருக்கும் பாகுபாடின்றி விலையில்லா மடிக்கணினி வழங்க வேண்டும் என்று இந்து இளைஞர் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. 
இது குறித்து இந்து இளைஞர் முன்னணியின் மாநிலச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 
தமிழகம் முழுவதிலும் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா மடிகணினிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாணவர்கள் படிக்கும் பொழுதே கல்வியில் மேன்மை பெறவேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். ஆனால், பல மாவட்டங்களில் பிளஸ் 2 படிப்பை முடித்து கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து முடிந்தும்கூட மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படாமல் உள்ளது. தற்பொழுது குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டும் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இது மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும், சென்ற ஆண்டு படிப்பை முடித்த மாணவர்களுக்கும் ஒரே சமயத்தில் மடிக்கணினிகள் வழங்கப்பட வேண்டும். 
அடுத்த ஆண்டு முதல் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புத் தொடங்கும் பொழுதே மடிக்கணினிகள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com