சுடச்சுட

    

    குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

    By DIN  |   Published on : 13th June 2019 09:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உலக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை ஒட்டி, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி திருப்பூர் மாவட்ட ஆட்சியரக  அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
    இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமை வகித்தார். இதில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில், அனைத்து அலுவலர்களும், பணியாளர்களும் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து, குழந்தைத் தொழிலாளர்களாகப் பணிபுரிந்து மீட்கப்பட்டு கல்வி பயின்று 10, 12-ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற 6 மாணவ, மாணவிளுக்கு தலா ரூ. 6ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. 
    நிறைவாக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு குறித்து கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.சுகுமார், தொழிலாளர் உதவி ஆணையர் சு.பிரேமா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), கீதா உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai